அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை - செல்வப்பெருந்தகை கண்டனம்

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சியே அமலாக்கத்துறை சோதனை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-16 13:17 IST

சென்னை,

அமைச்சர் ஐ.பெரியசாமி. வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஐ.பெரியசாமியின் மகன், மகள் வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.கட்சியின் மூத்தத்தலைவருமான ஐ.பெரியசாமி சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்