அமைச்சர் செந்தில்பாலாஜி நண்பர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-03-06 09:28 IST

கரூர்,

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்களின் வீடுகளில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி கரூரில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீட்டில் கேரள மாநிலத்தை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2023 ம் ஆண்டு ஏற்கனவே அங்கு சோதனை நடைபெற்றநிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுதவிர ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் மணி என்பவர் வீடு, கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் கார்த்தி வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்