என்னை சினிமாவிலிருந்து அனுப்பினாலும்.. நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
சினிமா துறை ரொம்ப சவாலானது. எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம் என்று சிவகார்த்திகேயன் கூறினார்.;
சென்னை,
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்தியேகன் கூறியதாவது: நான் படித்த துறைக்கும் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை. சினிமா துறை ரொம்ப சவாலானது. எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம்.
அப்படி துறைக்குள் நுழைந்து சவால் வரும் போதெல்லாம் நினைத்துக்கொள்வது என்கிட்ட இரண்டு டிகிரி இருக்கு.. இங்கிருந்து அனுப்பினால் கூட ஏதாவது வேலை செய்து பிழைத்த்துகொள்வேன் என்று நினைப்பேன். எனதுஅப்பா ஒருவேளை உணவு சாப்பிட்டு பள்ளி சென்றார்.
நான் மூன்று வேளை உணவு சாப்பிட்டு பள்ளி சென்றேன். எனது அப்பா நடந்தே பள்ளிக்கு சென்றார். நான் ஆட்டோ ரிக்ஷாவில் பள்ளிக்கு சென்றேன். “ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால், அடுத்துவரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும்" "மாணவ மாணவியரின் வாழ்க்கையை மாற்றும் அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்"இவ்வாறு அவர் கூறினார்.