எஸ்.ஐ.ஆர். படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றி - என்.ஆர்.இளங்கோ

வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே கட்சி தி.மு.க.தான் என்று என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-30 17:10 IST

சென்னை,

தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. அவை தீர்க்கப்படவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.

வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே கட்சி தி.மு.க.தான். 50 சதவீத மக்களுக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்புவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது வழங்கப்படும் படிவங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

பீகார் தேர்தலில் வாக்களித்த நபர், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்கிறார். ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பான குழப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை விளக்கமளிக்கவில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்