பெண் ‘பைக் டாக்சி’ டிரைவருக்கு பாலியல் தொல்லை: கல்லூரி மாணவர் கைது

கல்லூரி மாணவர் ஆபாசமாக பேசி பெண் டிரைவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;

Update:2025-09-13 14:58 IST

கோப்புப்படம் 

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், ‘பைக் டாக்சி’ டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் அமைந்தகரையை சேர்ந்த இம்ரான் (19 வயது) என்ற மாணவர் செல்போன் செயலி மூலம் கோயம்பேட்டில் இருந்து அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. செல்ல முன்பதிவு செய்துள்ளார். அவரை அந்த பெண் தனது மொபட்டில் ஏற்றிச்சென்றார்.

அரும்பாக்கம் செல்லும் வழியில் இம்ரான், செல்போனில் வேறு ஒருவருடன் பேசுவதுபோல் ஆபாசமாக பேசிக்கொண்டு பெண் டிரைவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்ரானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்