சென்னை தலைமை செயலகத்தில் பயர் அலாரம் திடீரென ஒலி எழுப்பியதால் பரபரப்பு

தலைமை செயலகத்தில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதி செய்தனர்.;

Update:2025-05-02 11:10 IST

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை நுழைவுவாயிலில் தீயணைப்பு துறை சார்பில் பயர் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும் பட்சத்தில், ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்வதற்காக இந்த கருவி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள பயர் அலாரம் இன்று திடீரென எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. இதையடுத்து அதிகாரிகளும், பாதுகாவலர்களும் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் மேற்கொண்ட சோதனையில் தலைமை செயலகத்தில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பயர் அலாரத்தில் சிறிய பழுது ஏற்பட்டு ஒலி எழுப்பியதாகவும், தற்போது பழுது சரிசெய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் தலைமை செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்