தூத்துக்குடியில் 3ம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் 3ம் தேதி நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் 2025 அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை 3.10.2025 மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள்/ ஊர்த்தலைவர்கள்/ மீனவர்கள் அனைவருக்கும், பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.