நீர்வரத்து அதிகரிப்பு; தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியை கடந்துள்ளது.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியை கடந்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து நீர்திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.