பொங்கல் எதிரொலி... ராக்கெட் வேகத்தில் உயரும் மல்லிகை பூ விலை.!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது.;

Update:2026-01-09 10:55 IST

மதுரை,

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மல்லிகை பூ விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

மதுரை திருமங்கலம் பூ மார்கெட்டில் இன்று மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.7,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பனிபொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை பூவின் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இனி வரும் நாட்களிலும் இன்னும் விலை அதிகரிக்கலாம் எனவும் வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்