தேர்தல் விளம்பரத்துக்காக விவசாயிகளை மோசடி செய்யும் திமுக அரசு - அண்ணாமலை தாக்கு

பயிர்க் கடன் புதுப்பிக்கப்படாததால், விவசாயிகள் கடும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-09 11:56 IST

சென்னை,

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

தமிழக கூட்டுறவு சங்கங்களில், பழைய பயிர்க் கடன் முழுத் தொகையும் கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், பயிர்க் கடன் புதுப்பிக்கப்படாததால், கடும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 கொடுக்க திமுக அரசிடம் பணம் இல்லாமல், விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றி, பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை இன்று மன உளைச்சலுக்கு தள்ளியிருக்கிறது திமுக அரசு.

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதே, விவசாயத்தைப் போற்றுவதற்காகத்தான் எனும்போது, தங்களது தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை திட்டமிட்டு மோசடி செய்திருக்கிறது திமுக அரசு. உடனடியாக விவசாயிகளின் பயிர்க் கடன்களைப் புதுப்பித்து, அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்