ஜாதி பெயர் சொல்லி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு
நெல்லையில் தான் கொடுத்த பணத்தை திரும்ப தராத ஒருவரை, அந்த நபர் ஜாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.;
திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம், வீரமாணிக்கபுரம் புதுகாலனியை சேர்ந்த அர்ச்சுனன் மகன் ஜானகிராமன். இவருக்கு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் முருகேசன் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு கடனாக பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை ஜானகிராமன் திரும்ப தராததால், அவரது ஜாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார் முருகேசன். இதுகுறித்த புகாரின்பேரில் முருகேசன் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.