போக்சோ வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.;
திருநெல்வேலி மாவட்டம், மானூர், தெற்குப்பட்டியை சேர்ந்த ராமர் மகன் முருகன் (வயது 55), போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து அவரது வேண்டுகோளின் பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் நேற்று முருகன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.