ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு வைக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-15 10:55 IST

ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும். இதற்கு அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் உலக அளவில் சிறப்பு பெற்றவை. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினமான இன்று (15-ந் தேதி) அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் கோலாகலமாக போட்டிகள் நடைபெற உள்ளன.

அவனியாபுரத்தில் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. அனைத்தும் நிறைவு பெற்று நேற்று மாலையில் வாடிவாசல் உள்பட அனைத்து இடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.இந்த 3 இடங்களிலும் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு நடந்தது.

பொங்கல் பண்டிகை நாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் டிஜிட்டல் (எல்.இ.டி.) ஸ்கோர் போர்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புள்ளிகள் விவரம் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைக்கு முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்