அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிரம்பிட வேண்டுகிறேன் - அண்ணாமலை பொங்கல் வாழ்த்து
பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூரியன், மழை, மண் ஆகியவற்றை வணங்கி, மண்ணோடு இணைந்து வாழ்ந்து, நாட்டின் உணவுத் தேவையை நிறைவேற்றும் விவசாயிகளின் அர்ப்பணிப்பைப் போற்றும் பொங்கல் திருநாள், பாரதப் பண்பாட்டின் அடையாளங்களுள் முக்கியமானது.
இந்தப் பொங்கல் திருநாள், தமிழகத்துக்கு வளமும், அமைதியும், நலனும் கொண்டு வரவும், தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அமைதி நிரம்பிடவும், வேண்டிக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.