தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: தவெக நிர்வாகிகளுக்கு கியூ.ஆர்.குறியீட்டு அடையாள அட்டை

பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.;

Update:2025-11-18 11:21 IST

சென்னை,

தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கியுள்ளோம். தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் முதல்கட்டமாக தற்போது 106 மாவட்டங்களுக்கு உட்பட்ட 214 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 280 நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் மற்றும் அதை சார்ந்த 21 ஆயிரத்து 134 கிளை மற்றும் வார்டுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 103 பேருக்கு கியூ.ஆர்.கோடு குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்