பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடத்தில் முதற்கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.;

Update:2025-09-04 16:59 IST

சென்னை,

சென்னை பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு இரண்டு கட்டங்களாக மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி முதல் சுங்குவார் சத்திரம் வரை மெட்ரோ பணி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 27.9 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மொத்தம் ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்;

சாலை மற்றும் பிற சிவில் பணிகள்: ரூ.252 கோடி செலவில் சாலை அமைப்பு, மரம் வெட்டுதல் மற்றும் மீண்டும் நடுதல், நில அளவை, போக்குவரத்து மேலாண்மை, அடிப்படை உள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நிலம் கைப்பற்றுதல் மற்றும் கட்டமைப்பு செலவுகள்: மிகப்பெரிய பகுதியான ரூ.1,836 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் குடிசைப்பகுதி மறுசீரமைப்பு: ரூ.16 கோடி.வடிவமைப்பு செலவுகள் மற்றும் பொது செலவுகள்: ரூ.13.40 கோடி. இதர செலவுகள் : ரூ.8.44 கோடி.இதனால் மொத்தமாக ரூ.2,125.84 கோடி தேவைப்பட்டு, அதை சுருக்கமாக ரூ.2,126 கோடியாக அரசு அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்