கார் விபத்தில் சிக்கிய கானா பாடகி
புதுப்பேட்டை மேற்கு கூவம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை விமலா;
சென்னை,
சென்னை மெரினா சாலையில் அதிவேகமாக சென்ற கார், தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை புதுப்பேட்டை மேற்கு கூவம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை விமலா. இவர் ஒரு கானா பாடகி. இவரும், அவரது நண்பர்கள் அருண் குமார், பிரசாந்த் மற்றும் வசந்த் ஆகியோரும் இன்று அதிகாலை சென்னை மெரினா சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரை அதிவேகமாக இயக்கியதால் அங்கிருந்த தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளாகினர்.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காரில் படுகாயத்துடன் இருந்த 4 பேரும் ஆம்பிலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு தற்போது உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.