ரோட்டு கடையில் பூரி சாப்பிட்ட சிறுமி; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பூரி சாப்பிடும் போது உருளைக்கிழங்கு மசாலாவில் பல்லி இருப்பதை பார்த்த சிறுமி அதிர்ச்சியடைந்தார்.;

Update:2025-05-26 15:54 IST

வேலூர்,

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் துணை ராணுவ படையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்கு வீடு திரும்பிய நாகராஜ் தனது 11 வயது மகளுக்கு இன்று காலையில் குடியாத்தம் அருகே சாலையோர கடையில் பூரி வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி பூரியை சாப்பிடும் போது உருளைக்கிழங்கு மசாலாவில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உடனடியாக நாகராஜ் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதனையடுத்து சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்