அம்பை அருகே வயலுக்குள் பாய்ந்த அரசு பஸ் - பெண் பலி

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-06-05 13:54 IST

கோப்புப்படம்

நெல்லை,

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசம் நோக்கி இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த அரசு பஸ்சானது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அருகில் இருந்த வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அனைந்தநாடார்பட்டியை சேர்ந்த ஜெயலெட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்