ரூ.20 கோடி செலவில் பசுமை பள்ளிகள் திட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பசுமை பள்ளிகள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.;

Update:2025-04-26 22:23 IST

கோப்புப்படம் 

சட்டசபையில் நிதித்துறை மற்றும் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

பசுமைப் பள்ளிகள் திட்டத்தின் வாயிலாக, பள்ளிகளில் சூரிய ஒளி ஆற்றல் பயன்பாடு மூலம் மின் விளக்குகள், பம்புகள், ஆழ்துளைக் கிணறுகள், மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், உர உற்பத்தி, காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் இல்லா சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

சாலைவழி வாகனங்களின் உமிழ்வு வெளியீட்டை தொலைவில் இருந்து கண்காணிக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முன்னோட்ட அடிப்படையில் வாகன உமிழ்வைத் தொலைவில் இருந்து கண்காணிக்கும் முறையை ரூ.15 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்