குரூப்-4 தேர்வில் தோல்வி: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்ததால் சத்தியரூபா மனவிரக்தியில் இருந்துள்ளார்.;

Update:2025-10-26 06:44 IST

கோப்புப்படம் 

தென்காசி மாவட்டம் முப்புலியூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் சத்தியரூபா (21 வயது). இவர் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு பணி தேர்வுக்கு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை சத்தியரூபா எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் குடும்பத்தினர், அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி மற்றும் திருமணம் செய்ய விரும்பம் இல்லாததால் சத்தியரூபா மனவிரக்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியரூபா பரிதாபமாக இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்