கடலூரில் விபத்தில் சிக்கிய காருக்குள் குட்கா பொருட்கள் பறிமுதல் - போலீஸ் விசாரணை

குட்கா பொருட்களை கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-11-12 17:09 IST

கடலூர்,

உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலையில் இருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, திருவாமூர் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்து வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில், இருவர் தப்பி ஓடி விட்டனர். டிரைவர் படுகாயங்களுடன் காரில் சிக்கி கொண்டார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு டிரைவரை மீட்டனர். அப்போது அந்த காருக்குள் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காயமடைந்த டிரைவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், காருக்குள் இருந்த குட்கா பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்