அதிக அளவில் முதலீடு: கோவை கிழக்குப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பு அதிகரிப்பு

ஐ.டி. நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை கோவையில் செய்ய தொடங்குகிறது.;

Update:2025-11-28 08:53 IST

கோவை,

கோவையின் தொழில் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மொத்தம், 43,844 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தித் தொழில் மேம்பாட்டிற்காக, ஆவாரம்பாளையத்தில் 14.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்காக, மோப்பிரிப்பாளையத்தில், 26.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் முதலீடுகள் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. ஜவுளி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், பொது உற்பத்தி மற்றும் சுற்றுலா துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. கோவை அருகே உள்ள மோப்பிரிப்பாளையத்தில், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்காக 26.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு திறன்மிகு மையம் நிறுவப்பட உள்ளது.

சூலூரில் கோவையை சேர்ந்த ஜெப்டோ லாஜிக் டெக்னாலஜி நிறுவனம் செமிகண்டக்டர் எலெக்ட்ரானிக் தொழிற்சாலையை ரூ.250 கோடியில் அமைக்க உள்ளது. கரவளி மாதப்பூர் பகுதியில் லாஜிஸ்டிக் பார்க் (தளவாட பூங்கா) அமைக்கப்பட உள்ளது. இதுதவிர பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை கோவையில் செய்ய தொடங்குகிறது.

உள்ளூரை சேர்ந்த முதலீட்டாளர்கள்அதிக அளவில் முதலீடு செய்வது கோவை நகரம் குறிப்பாக கிழக்குப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தொழில்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்