விஜய் வீட்டிற்குள் இளைஞர் சென்றது எப்படி? - விசாரணையில் புதிய தகவல்

பாதுகாவலர்கள் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினமே இளைஞர் உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.;

Update:2025-09-19 15:56 IST

சென்னை,

சென்னை - நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அந்த இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தது மதுராந்தகத்தை சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. இவர் விஜய் வீட்டின் பின் பக்கம் உள்ள சிறிய கேட் வழியாக பாதுகாவலர்கள் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினமே உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது. விஜயை பார்க்க இரவு முழுவதும் மாடியின் மீது உணவின்றி பதுங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.  

விஜய்யை பார்த்ததும், அருண் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதும், அவரை தரைத்தளத்திற்கு அழைத்து வந்து பாதுகாவலர்களிடம் விஜய் ஒப்படைத்ததும் தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு விஜய் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்