ராமர் பாலத்தை தரிசித்தேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

பிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2025-04-06 13:30 IST

ராமேசுவரம்,

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சிறிது நேரத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் பாலத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. மேலும், தெய்வீக செயலாக, அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் இதுவும் நடந்தது. இருவரின் தரிசனத்தையும் பெற்ற பாக்கியம். பிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Tags:    

மேலும் செய்திகள்