டெல்லிக்கு காசு போனால் திரும்பி வருவது கஷ்டம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னையில் ஆட்டோ மொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:-
இந்தியாவிலேயே உற்பத்தியின் தலைமையிடமாக தமிழ்நாடு திகழ்கிறது. கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன. டெல்லிக்கு காசு போனால் திரும்பி வருவது கஷ்டம். தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு போகும் ஒரு ரூபாயில் 29 பைசாதான் திரும்ப வருகிறது. நமது கடினமாக உழைப்பால் உருவாகும் பணம் நாட்டு வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றார்.