பொங்கல் எதிரொலி... எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது.;

Update:2026-01-13 20:34 IST

சென்னை,

நாளை போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. அதன் பின்னர் மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள், வார விடுமுறை என அடுத்தடுத்து 5 தினங்கள் விடுமுறை வருகிறது.

தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட மக்கள் விருப்பப்படுவர். எனவே சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்துகள், ரெயில்கள் மூலமும் சென்னை நகரை விட்டு புறப்பட்டு கொண்டு இருக்கின்றனர். சிலர் தங்களது சொந்த வாகனங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் பேருந்து மற்றும் ரெயில்கள் மூலம் தங்களது பயணத்தை தொடர்கின்றனர்.

அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களான நெல்லை, அனந்தபுரி, பொதிகை மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.

முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணிகள், உடனடி டிக்கெட்டை பெற்றுக்கொண்டு முன்பதிவில்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க முண்டியடித்துக்கொண்டனர். இதனால் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. பயணிகள் முண்டியடிப்பதை தவிக்க போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். வரும் நாட்களிலும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்