நீலகிரி: பொங்கல் விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி

பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.;

Update:2026-01-13 18:32 IST

தமிழர் திருநாளான தை முதல்நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுதினம் (15ம் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதனிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். இதனை தொடர்ந்து பள்ளியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்