இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் 4 ஆண்டு பழக்கம்: விடுதியில் அறை எடுத்த கள்ளக்காதலன்...உல்லாசமாக இருக்கும்போது வெடித்த மோதல்
பணம் தந்தால் தால் நாம் மீண்டும் உல்லாசமாக இருக்க முடியும் என்று பார்த்திபனிடம் சாலா கூறியுள்ளதாக கூறப்படுகிறது.;
சேலம்,
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நேற்று இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றீ ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து பார்வையிட்டனர். அப்போது பிணமாக கிடந்த பெண் மேலாடை இல்லாமல் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் தங்கும் விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நேற்று மதியம் 1 மணியளவில் கொலை செய்யப்பட்ட பெண்ணும் அவருடன் 30 வயது மதிக்கத்தக்க ஆணும் வந்து அறை எடுத்து தங்கினர் என்றும், அவர்கள் உணவுக்கு கூட அறையை விட்டு வெளியில் வரவில்லை என்பதும் தெரிய வந்தது.
மேலும் அந்த பெண்ணுடன் தங்கிய வாலிபர் மட்டும் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தங்கும் விடுதியை விட்டு வெளியே சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்பின் அவர்கள் தங்கியிருந்த அறை பூட்டியே கிடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் தங்கும் விடுதி ஊழியர்கள் அறையை திறந்துபார்த்தபோது அந்தபெண் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவருடன் தங்கிய வாலிபர் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட பெண் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஏர் கோலபட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மனைவி சாலா (வயது 33) என்று தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன், 13 வயதில் ஒரு மகள் இருப்பது தெரிய வந்தது. சாலா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது இவருக்கும் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை தெப்பக்குட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர மகன் பார்த்திபன் வயது 35 என்பவருக்கும் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்த்திபன் என்பவர் எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்தநிலையில் இளம் பெண் சாலாவும் , பார்த்திபனும் கடந்த 4 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஏற்பட்ட பழக்கத்தால் பழகி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சாலா, பார்த்திபன் ஆகியோர் நேற்று ஏற்காடுக்கு வந்து அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது சாலா பார்த்திபனிடம் உல்லாசம் மட்டும் அனுபவிக்கிறாயே..பணம் எங்கே என்று கேட்டுள்ளார். பணம் ஊருக்கு போய் அனுப்பி விடுகிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பணம் தந்தால் தால் நாம் மீண்டும் உல்லாசமாக இருக்க முடியும் என்று சாலா கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது. ஏற்காட்டில் விடுதி அறை எடுத்தது வீணாகிவிடுமோ என நினைத்த பார்த்திபன் சாலாவிடம் சமாதானம் செய்ய முயன்றார். சாலா பணம் கேட்பதிலேயே குறியாக இருந்துள்ளார். இந்தநிலையில், ஆத்திரம் அடைந்த பார்த்திபன் கழுத்தை நெரித்து சாலாவை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இளம்பிள்ளைக்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த பார்த்திபனை லாவகமாக கைது செய்து ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.