மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.;

Update:2025-05-04 05:04 IST

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,363 கனஅடியாக இருந்தது.நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 663 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 107.81 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 107.95 அடியாக உயர்ந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்