திருச்செந்தூர் கோவில் முன்பு கடல் அரிப்பு: கவனமுடன் நீராட பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

அதிக அளவு பாறைகள் தெரிவதால் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.;

Update:2026-01-10 13:42 IST

திருச்செந்தூர்,

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடிய பிறகே முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த ஒரு மாத காலமாக திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடற்கரையில் கடல் அரிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுமார் 6 அடி உயரத்திற்கும் 100 அடி தூரத்துக்கும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் கடலுக்குள் இறங்கி நீராட முடியாத நிலை உள்ளது. தற்போது கடல் அரிப்பு அதிகரித்துள்ளது.

இதனால் கடலுக்குள் இருக்கும் பாறைகள் அதிக அளவு வெளியே தெரிகிறது. அதன் அருகே நீராடுபவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கோவில் நிர்வாகம் சார்பில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் அந்த இடத்தை தாண்டி நீராட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்படுள்ள இடத்தில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்