அதிர்ச்சி சம்பவம்: தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறி பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.;

Update:2025-08-15 12:20 IST

கோப்புப்படம் 

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே நெடுவாசல் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வேம்பரசன். இவரது மனைவிக்கு 3 வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், குழந்தை அழுததை தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, திக்கு முக்காடியது.

இதையடுத்து உடனடியாக உறவினர்கள் குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்