10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்

முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கை அளித்தார்.;

Update:2025-11-18 08:45 IST

சென்னை,

ஜாக்டோ-ஜியோ மாநில மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் போராடுகிறோமோ அப்போதெல்லாம் அழைத்து பேசி ஆறுதல்படுத்துகிறார்களே தவிர, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதேபோல் மார்ச் 13-ந்தேதி முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி நம்பிக்கை அளித்தார்.

அதன் அடிப்படையில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் உணவு மட்டத்தை அறிந்து எஞ்சிய சில மாதங்களே உள்ள நிலையில் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றாத காரணத்தினால், 18-ந்தேதி (இன்று) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்