புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு
எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கைவிட கோரி நேற்று முன்தினம் த.வெ.க. சார்பில் சென்னை திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் த.வெ.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.இதில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் போது சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்புகளும், செடிகளும் சேதப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி திருவல்லிக்கேணி போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.