இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்;
இரவு 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து - 7 பேர் சடலமாக மீட்பு
உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
தி.மு.க. அரசின் ஊழல், தவறுகளால், நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி
விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு - சுகாதாரத்துறை
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நாய்க்கடியால் நடப்பு ஆண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விளையாடுவாரா..?
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது.
புதிய உச்சம்..! நாமக்கல்லில் தொடர்ந்து அதிகரிக்கும் முட்டை கொள்முதல் விலை
தேவை அதிகரிப்பு காரணமாக, முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் இன்று (18.11.2025 - வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 103 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 910 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 63 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 899 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனாளர்கள் அவதி
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 5.15 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.
விழுப்புரம்: விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
விழுப்புரம் மாவட்டம் விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது.