நடிகர் நெப்போலியன் உடன் கனிமொழி சந்திப்பு

ஜப்பானில் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் கொடுத்த விருந்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கனிமொழி, நெப்போலியன் பங்கேற்றனர்.;

Update:2025-04-21 22:26 IST

சென்னை,

நடிகரும் தமிழக முன்னாள் எம்.பி.யுமான நெப்போலியன் குடும்பத்தினர் ஜப்பானில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு திமுக எம்.பி., கனிமொழி நெப்போலியன் குடும்பத்தினரை சந்தித்து உள்ளார். அது குறித்து நெப்போலியன் தன்னுடைய சமூக வளைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் "நான் பெரிதும் மதிக்கக் கூடிய எனது அரசியல் குரு தலைவர் கலைஞர் அவர்களின் மகள் திருமதி கனிமொழி அவர்கள் ஒரு வார காலம் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பாக ஜப்பானில் இந்திய தூதுவர் திரு சிபி சார்ஜ் அவர்கள் கொடுத்த விருந்தில் தெலுங்கானா மாநிலத்தின் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அவர்களும் கனிமொழி அவர்களும் நானும் கலந்து கொண்டோம். இன்று ஏப்ரல் 21 திங்கள் காலை திருமதி கனிமொழி அவர்கள் ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து என் மகன் தனுஷையும் மருமகள் அக்ஷயாவையும் வாழ்த்தினார்கள். சில மணி நேரம் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். மகிழ்வோடு மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம். இன்று இரவு அவர் இந்தியா திரும்புகிறார்" என்று கூறியிருக்கிறார்.

அதுபோல இன்னொரு வீடியோவில் கனிமொழி நெப்போலியன் குடும்பத்துடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கலைஞர் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் போது ஒரு நர்ஸிடம் தண்ணி கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார் ஆனால் அவருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இவர் கேட்கிறார் என்று அங்கு இருந்த நர்ஸ் அவருக்கு உதட்டில் மட்டும் தண்ணீரை தொட்டு வைத்து இருக்கிறார். அதற்கு அவர் அவங்க கிட்ட உங்க பெயர் என்ன காவிரியா என்று கடைசி நேரத்தில் கூட கிண்டல் செய்து இருக்கிறார் என்று கனிமொழி பேச அதுபோல கலைஞர் குறித்த அனுபவங்களை நெப்போலியனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்