வீட்டு மனை வாங்கி தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.29 லட்சம் மோசடி செய்தவர் கைது

வீட்டுமனை பத்திரப்பதிவு செய்து தருவதாக ஆசை வார்த்தைகூறி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-11-21 02:02 IST

கரூர்,

கரூர் மாவட்டம், குளித்தலை மேற்கு மடவாளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (வயது 58). குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் வீட்டுமனை விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டு, இவர் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு கரூர் சின்னாண்டாங்கோவில் தெருவை சேர்ந்த ரவீந்திரன் (38) என்பவரிடம் வீட்டு மனை வாங்குவதற்கு பேசி உள்ளார்.

இதையடுத்து ரவீந்திரன் வீட்டுமனை பத்திரப்பதிவு செய்து தருவதாக ஆசை வார்த்தைகூறி அமுதாவிடம் ரூ.29 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து அமுதா, ரவீந்திரன் மற்றும் அவரது மனைவி நிஷாந்தியிடம் கேட்டபோது அவர்கள் அமுதாவை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமுதா குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்