கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரித்தார்.;
சென்னை,
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரித்தார்.