அரசின் தூய்மைப் பயணம் தொய்வின்றி தொடர்கிறது: உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் தூய்மைப் பயணம் தொய்வின்றி தொடர்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் தூய்மைப் பயணம் தொய்வின்றி தொடர்கிறது.அதன்படி, எதிர்வரும் போகிப் பண்டிகையை முன்னிட்டு காற்று மாசு ஏற்படுவதையும் குப்பைகள் குவிவதை தவிர்க்கும் வகையில் தூய்மை மிஷனின் 'டிரைவ் பண்ணலாமா' (Drive Pannalama) எனும் முன்னெடுப்பை தொடங்கவுள்ளோம்.தூய்மைப் பணியாளர்களின் பங்கேற்புடன், வீடுகளுக்கே வந்தும் - சேகரிப்பு மையங்கள் மூலமும் தேவையற்ற பழைய பொருட்களைச் சேகரிப்பது இந்த முன்னெடுப்பின் நோக்கம். குப்பைக் கிடங்குகளுக்கு குப்பையே செல்லாத(Zero waste to landfill) நிலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம்.
எதிர்கால தலைமுறைக்கு சிறந்த சுற்றுச்சூழலையும் சுவாசிக்க நல்ல காற்றையும் உறுதிப்படுத்த வேண்டியது நம் எல்லோரின் கூட்டுப் பொறுப்பு என்பதை உணர்வோம். என தெரிவித்துள்ளார்.