செல்போன் என நினைத்து பேடிஎம் மிஷினை திருடி சென்ற நபர்

சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2025-04-17 17:00 IST

நீலகிரி மாவட்டம் உதகையில் காபி ஹவுஸ் சந்திப்பில் உள்ள பிரபல உணவகத்தில், சாப்பிடுவதற்காக வந்த நபர் ஒருவர், சாப்பிட்டு விட்டு அதற்கான பில் தொகையை செலுத்தி இருக்கிறார். பணம் வாங்கிய பின்னர் காசாளர் அவருடைய வேலையை கவனிக்க சென்று விட்டார்.

ஆனால், சாப்பிட வந்த நபர் பணம் கொடுத்த பின்னரும், போகாமல் காசாளரின் மேசை அருகேயே நின்றபடி இருந்துள்ளார். அப்போது, மேசையில் இருந்த பேடிஎம் மிஷினை நைசாக எடுத்த அவர், செல்போன் என நினைத்து அதனை திருடி சென்றார். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்