மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக புறக்கணிப்பு

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.;

Update:2025-11-02 09:56 IST

சென்னை,

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வருகிற 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, ஆஸ்டின் ஆகியோர் ஒவ்வொரு கட்சி தலைவர்களின் அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதம் கொடுத்தனர்.அந்த வகையில் தவெக கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பூச்சி முருகன் சந்தித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு கடிதத்தை வழங்கினார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டத்தை கூட்டி இருந்தால் பங்கேற்று இருப்போம் எனவும் திமுக சார்பில் கூட்டம் நடைபெற உள்ளதால் பங்கேற்க முடியாது எனவும் அக்கட்சி நிர்வாகிகள்விளக்கமளித்துள்ளனர் .

Tags:    

மேலும் செய்திகள்