பல்வேறு துறைகளின் சார்பில் 390 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது;

Update:2025-05-07 19:10 IST

சென்னை ,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாம் ஆண்டு தொடங்குவதையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் 390 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, வேளாண்மை - உழவர் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம்/மகளிர் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, நெடுஞ்சாலைகள் துறை ஆகிய துறைகளின் சார்பில் 390 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நான்காண்டு சாதனைகள் பற்றிய குறும்படத்தினையும் பார்வையிட்டார்.

திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த நான்காண்டுகளில், மகளிர் விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், தோழி விடுதிகள் திட்டம், முதல்வர் மருந்தகங்கள், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்,

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், வடசென்னை வளர்ச்சி திட்டம், ஊட்டச் சத்தை உறுதிசெய் திட்டம் போன்ற பல்வேறு ஏற்றமிகு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது;

மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இணைப்பு கண்ணாடி இழைப்பாலம், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை, கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், சென்னையில் முதல்வர் படைப்பகம், கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா போன்றவையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நலனுக்காக மாவட்டங்கள்தோறும் அரசு மாதிரிப் பள்ளிகளும், விளையாட்டு மைதானங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது;

முதல்-அமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மேலும், தமிழ்நாட்டினை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திட "முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு" என்ற முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தி முதலீடுகளை ஈர்த்து, தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டினை திகழச் செய்திடவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்