அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்

சிறை கைதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடி உள்ளார்.;

Update:2025-02-17 12:59 IST

வேலூர்,

வேலூர் அடுத்த காட்பாடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிச்சை காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த பாபு ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளார்.

இந்த நிலையில் உடல் நிலை குறைவு காரணமாக கடந்த 15 ஆம் தேதி சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்ட நிலையில் தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதியான பாபு ஷேக்கை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்