நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் மறைவு - அண்ணாமலை இரங்கல்

இல. கணேசன் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-15 19:31 IST

சென்னை,

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

நாகாலாந்து மாநில கவர்னரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான, இல. கணேசன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர்.

இல. கணேசன் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்