நாகர்கோவில் - கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்.எச்.பி. பெட்டி இணைப்பு

பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.;

Update:2025-10-10 15:19 IST

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி. (இலகுரக பெட்டிகள்) என்னும் நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, பாண்டியன், முத்துநகர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், (வண்டி எண்.16354/16353) நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், வரும் டிசம்பர் 18-ந் தேதி முதலும், கச்சிகுடாவில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில், வரும் டிசம்பர் 14-ந் தேதி முதலும் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்