நாமக்கல்: விடுதி உணவால் மாணவர்களுக்கு ஒவ்வாமை - தனியார் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

விடுதியில் தங்கியிருந்த கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர்.;

Update:2025-10-29 21:27 IST

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருவதாகவும், அங்கு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கல்லூரி மாணவர்களுக்கு 5 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். அதே சமயம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்