தேசிய பவர் லிப்டிங்; தமிழகத்தின் முதல் பெண் நடுவர் நியமனம்
விளையாட்டு துறையில் என்னை போன்று பல பெண்கள் தலைமை பெறுப்புகளுக்கு வரவேண்டும் என ஆரத்தி அருண் விருப்பம் தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
தேசிய பவர் லிப்டிங் போட்டியின் நடுவராக முதன்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஆரத்தி அருண் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். காமன்வெல்த் கூட்டமைப்பு மற்றும் ஆசிய பவர்லிப்டிங் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று அவர் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
அவர் பல முறை தேசிய சாம்பியனாகவும் மகுடம் சூடியுள்ளார். நடுவராக நியமிக்கப்பட்டது பற்றி ஆரத்தி அருண் கூறும்போது, இந்த பதவியால் என்னுடைய பொறுப்பு அதிகரித்து உள்ளது என்றார்.
விளையாட்டு துறையில் என்னை போன்று பல பெண்கள் தலைமை பெறுப்புகளுக்கு வரவேண்டும் என விருப்பமும் தெரிவித்து உள்ளார். அவர்கள் விளையாட்டு துறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.