தவெக புதிய நிர்வாகக் குழு நியமனம்

28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2025-10-28 19:09 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, 28 பேர் அடங்கிய புதிய  நிர்வாகக் குழுவை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு தன்னுடைய வழிகாட்டுதலின்படி இயங்கும் எனவும் , புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்