நீலகிரி: இ-பாஸ் சர்வரில் சிக்கல் - சுற்றுலா பயணிகள் அவதி

சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது.;

Update:2025-05-01 19:18 IST
நீலகிரி: இ-பாஸ் சர்வரில் சிக்கல் - சுற்றுலா பயணிகள் அவதி

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களையும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள சூழலில், நீலகிரிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இ-பாஸ் சர்வரில் இன்று திடீரென சிக்கல் ஏற்பட்டதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் இ-பாஸ் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.

இதனால் ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து சர்வரில் ஏற்பட்ட சிக்கல் சரிசெய்யப்பட்டு, இ-பாஸ் எடுத்த சுற்றுலா பயணிகள் மேற்கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்