அந்தியோதயா ரெயில் மீது கல்வீசிய வடமாநில வாலிபர் கைது

அந்தியோதயா ரெயில் மீது கல்வீசிய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2026-01-05 01:15 IST

சென்னை,

நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு தினமும் அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த 2-ந் தேதி மதியம் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காவல்கிணறை தாண்டி சென்றது. அப்போது திடீரென ரெயில் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது.

இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து இருக்கையில் அமர்ந்திருந்த கல்குளம் பகுதியைச் சேர்ந்த ரீனா அன்னமேரி (வயது 67) என்பவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த வகையில் வடமாநில வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம் கலந்தி மாவட்டம் பலாபறசீயாதா பகுதியைச் சேர்ந்த பாபுரா பரயோ(வயது19) என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று பாபுரா பரயோ மதுபோதையில் ரெயில் மீது கல் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்